Pages

Monday, December 28, 2009ஒரே முறைதான் பிறந்தாய்- இவ்வுலகுக்கு 
இரண்டாம் நிலவாய்- ஆனால் நானோ
உன்னைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் 
புதிதாய்ப்  பிறக்கிறேன் புரியாத புதிராய்....!!!

Saturday, November 21, 2009


வலிகள் இருந்த போதும் சிரிக்கின்றேன்...

மறக்காத உன் நினைவுகளால்...!!

Saturday, November 14, 2009உலகுடன் சண்டையிட்டு...

உறக்கத்தைக் கட்டிகொண்டேன்.....

கனவிலேனும் உன்னருகில் நானிருப்பதை ரசிக்க......

Thursday, November 5, 2009


மறுபடியும் நான் உன்னை சந்திக்க நேர்ந்தால் ...
என் தூக்கத்தையாவது திருப்பிக் கொடு ....
மறுபடியும் நான் தூங்கினால் ....
என் கனவிலேனும் வந்து விடு .........!!!!

Monday, September 14, 2009


ஒவ்வொரு விடியல்களும் என் வாழ்க்கை ஏட்டின்
ஒவ்வொரு பக்கங்கள் .....
படிக்கத் தெரிந்தும் முடிக்கத் தெரியாத பாவி நானே .....!!!

உன் வாழ்வின் சந்தோஷமான நேரங்களில் நான் உன் அருகில் இருந்தேன் - நீ
என் வாழ்வின் சோகமான நேரங்களிலும் என் அருகில் இருப்பாய் என்றே .....!!!

Sunday, September 13, 2009

விடை தெரியாத வாழ்வு ..
வயதாகிக் கொண்டிருக்கும் மனது ...
இவை இரண்டுக்கும் நடுவே நான் .....
எப்போ தான் உதிக்குமோ எனக்காக இந்த சூரியன் ...!!!

உன் பிறப்பை எண்ணிக் கவலைகொள்ளாமல் ...
உன் பிறப்பால் என்ன சாத்தித்தாய் என்று கவலைகொள்.....!!!

வாழ்க்கை என்றுமே அழகானது சுயநலனோடு மட்டும் வாழாது......
பிறர்நலனுக்காகவும் வாழும் போது......!!!!!

Sunday, July 26, 2009


"நீ பேசிய வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சோடு
நீ பேசாத மவுனங்கள் என்றும் என் கண்ணோடு
நான் சொல்ல வந்த காதல் உன் கண்களுக்கு முன்னால்
பேச தைரியம் இல்லாத என் இதயத்தோடு "


என்னுயிரில் கலந்திட்ட உன்யுயிரை என்னால் பிரிக்க முடியவில்லை ...
உன்னால் மட்டும் எப்படி முடிந்ததோ பெண்ணே ....!!!
உனது முயற்சியின் வழியை என்னக்கும் ௬று..!!!
தொடந்தும் முயற்சிகளின் தோல்வியோடு ...

Saturday, July 25, 2009


என்னக்குள்ளும் பல மாற்றம் நேற்று வரை இருந்ததில்லை .... மாறிய பின் நான் நானாக இருக்க முடியவில்லை ... உன்னை மறக்க முயன்றும் தோற்றுப் போகிறேன் உன் அழியாத நினைவுகளால்.♥

Kavithai with song 02

Friday, July 17, 2009
உன் அழகையும் அன்பையும் எனக்காகவே 
படைத்த இறைவன் -

உன்னை மட்டும் ஏன் எனக்காகப் 

படைக்க மறந்துவிட்டான் ???


Friday, July 10, 2009

உன் கண்ணோடு கண் பார்த்து பேசும் போது - நீ


வெட்கப்படும் அந்த ஓர் நிமிடம் இந்த உலகமே என் காலடியில் - அப்போ

சிவக்கின்ற உன் கன்னங்கள் , சிரிக்கின்ற செவிதழ்கள் - என்

வாழ்வின் மறக்கமுடியாத பொக்கிஷங்கள்.....


உன் இதயத்தில் ஓரமாய் ஓர் இடம் கொடு - இறுதி

மூச்சுள்ளவரை உனக்காகவே துடிக்கும் என் இதயம்....!!

Sunday, July 5, 2009

நியத்தைப் பார்த்துக் நேசிக்கவில்லை - உன்

உள்ளத்தைப் பார்த்தே நேசித்தேன் - உன்


உள்ளத்தை மட்டும் நேசித்ததால் - உன்

நியத்தை நினைக்க மறந்துவிட்டேன் .....!!!

Tuesday, June 30, 2009


தனியாளாய் உணர்ந்தேன் எனக்காக நீயிருக்கிறாய் என உணரும்வரை...
என் வெற்றியும் என் தோல்வியும் உந்தன் கையில்தானடி..!!!உனக்காக உனை வெறுக்கத்தான் முயல்கிறேன்,
விடிந்ததும் வெளிவரும் கதிரவனாய் -உன்
நினைவு என்னுள் விடியலாய் பிரகாசிக்குதே ..!!!

உன் வருகை என் வாழ்வில் தந்த திருப்புமுனையை
திருத்திக்கொள்ள தைரியமில்லையடி எனக்கு...
என் வாழ்விலிருந்து உனை நீக்கும் உரிமையுமில்லையடி எனக்கு...!!!

உன்னை காணும் முன்பே என்னை அறியாமல் பாசம் வந்தது,
உன்னை கண்ட பின்பு நட்பை அறிந்தேன்,
உன்னோடு சண்டை போட்ட பொது உன் மேல் வைத்த காதலை உணர்ந்தேன்,
உன் நினைவுகள் என்னில் இல்லாவிடில் நான் எப்படி உயிரோடு சொல்லடி??

Monday, June 22, 2009


நீ கேட்கும் போதெல்லாம் என் கவிதைகளை
தந்துகொண்டே இருக்கிறேன் ஏதாவது
ஒரு கவிதையை படித்துவிட்டாவது
என்னைக் கேட்பாய் என்ற நம்பிக்கையில்
தினமும் நீ என்னை பார்த்தும் பாராமல் போகிறாய்
அதையும் பார்ப்பம் பாரமல் பார்க்காம எத்தனை மட்டும் பார்க்கப் போறாயென்று
"சொன்னா கேக்க மாட்டிங்களா"?? என்றதை கேக்கிறதற்காகவே தினமும் உன்னோடு சண்டை போடுவேன் ,
கோபத்தில் சிவக்கின்ற உன் கன்னங்களையும் கண்களையும் பார்க்க வேண்டும் ,
உன் புன்சிரிப்பிலே என் ஆயுளைக் கழிக்க வேண்டும் ....
உனக்காகவே இந்த உலகில் வாழ வேண்டும்.. உன் மனதின் சோகங்களை ஆற்ற வேண்டும்.
ஓர் இரவெனும் தூங்கது உன் தூக்கத்தை ரசிக்க வேண்டும் ...
உன் மன நிழலில் என் மன நிறைவோடு இளைப்பாற வேண்டும் ...
உன் மடி மீது தலை சாய்த்து தூங்க வேண்டும்,
தூங்காது உன்னோடு பேச வேண்டும் ....
மொத்தத்தில் நீ எனக்கு பாசத்தின் தாயக வேண்டும் ......

என்ற என் ஆசை இன்னும் நிறைவேறவில்லை....
என்றுமே நிறைவேறாத ஆசையாகப் போய்விடுமோ...
என்பது தான் எனது ஆதங்கம் .....

நீ இருந்தால் நான் இருப்பேன் ,
நீ இல்லையேல் நான் இறப்பேன் ,
உன் ஒற்றைச் சொல்லுக்காய் ஏங்குகிறேன் ...
என்னுயிரில் ஓருயிராய் கலந்தவளே....♥

Wednesday, June 17, 2009


இரு வரிக் கவிதை௬ட

எழுத முடியவில்லை ,

உனது பெயர் மட்டுமே

நினைவில் இருப்பதால்::::><<

மறந்து போக நினைத்தேன் அது உன் தொல்லையே ...
இறந்து போக நினைத்தேன் தடுத்தாய் முல்லையே ...
காதலுக்கு கண்ணீர் மீது ரொம்ப இஷ்டமோ.....<<♥ >>

நீ கொண்ட மௌனம் எனைக் கொல்லுகின்ற விஷம் ..
நான் கொண்ட அன்பு நம்மை வாழ வைக்கும் சந்தோஷம்....>>♥ <<

Monday, June 15, 2009


உன் நிழலைக்௬டப் பார்த்ததில்லை ...
உன்னை நான் நானாகவே பார்த்தேன் - என்னை
நீ நாயாகவே பார்க்கிறாய் என்பதைத் தெரியாமல்......!!!

நீ வரமாட்டாய் என்று தெரிந்தும் காத்திருக்கிறேன்....

உன் சுவாசக் காற்றாவது என்னை வந்தடையும் என்பதற்காய்::::

Saturday, June 13, 2009


~என் உயிர் நீயடி உன் உருவம் நானடி ....

என் உருவம் நீ மாறிடலாம்

என்னுயிர் நீ என்பது எப்போவும் மாறது...!!! ~

Friday, June 12, 2009


~ நீ என் வாழ்வில் வானம் என்றே நினைத்தேன்

வானவில்லாய் ஆகினாய் ....

ஈரேழு ஜென்மமும் நீ தான் என்னுயிர்

என நினைத்தேன் ......

இரு வரித் திருக்குறளாய் போனாயடி .....!!~

Thursday, June 11, 2009


அன்று என்னிடம் கேட்ட மாற்றம் என்னவேன்று
இப்போது தான் உணர்ந்தேன்
இன்று எனக்கு கிடைத்த ஏமாற்றம் தான் நீ
கூறிய மாற்றம் என்று .....!!!!!

Tuesday, June 9, 2009


காதல் ஒன்றும் காயமல்ல காலப் போக்கில் மாறிட 
கண்ணீர் என்றும் நிரந்தரம் அல்ல ....
துடைப்பதட்க்கு நல்ல துணை கிட்டும் வரை .....!!!!

எனைத் தூரிகையும் ஆக்கினாள்
தூய்மையும் ஆக்கினாள் - இன்று 
துன்பத்திலும் ஆழ்த்தினாள்....!!!!

புகைப்படம் காட்டி புண் ஆக்காதே என் இதயத்தை
புல்லில் ௬ட ஈரம் உண்டு புன்னகைக்கும் பூவே
உன்தன் இதயத்தில் மட்டும் ஈரம் இல்லையடி.....!!!

காற்றிலும் மிதந்தேன்
கண்ணீரிலும் குளித்தேன்
கனவுகளில் மட்டும் வாழ்ந்துவிடேன்
எல்லாம் உன்னால் பெண்ணே ....!!!!

~உனை நான் மறப்பேன் என்றே நினைத்தாயோ மரணித்துப் போவேன்
மரணித்து போவேன் என்றே நினைத்தாயோ உனை நினைக்க மறந்து போவேன்
மரணத்தையும் மறப்பதையும் உதறினேன்
உனை மட்டுமே நினைப்பதற்கே ....!!!~

~மாறாத மனிதர்களும் இல்லை மறக்காத வலிகளும் இல்லை-
மாற வேண்டும் நீ மறக்க வேண்டும் நீ - ஆனால்
மறுக்காதே என் மனதை , மறைக்காதே உன் மனதை
மண்டியிட்டுக் கேட்கின்றேன்.....!!!!!~

~மாற்றங்கள் என்றும் மாறாதவை இன்று நான் , நாளை நீ மாறுவாய் காத்திருக்கிறேன் நம்பிக்கையுடன்..... !!!!~

Wednesday, May 27, 2009