Friday, July 24, 2009
Friday, July 17, 2009
Friday, July 10, 2009
Sunday, July 5, 2009
Tuesday, June 30, 2009
Monday, June 22, 2009

நீ கேட்கும் போதெல்லாம் என் கவிதைகளை
தந்துகொண்டே இருக்கிறேன் ஏதாவது
ஒரு கவிதையை படித்துவிட்டாவது
என்னைக் கேட்பாய் என்ற நம்பிக்கையில்
தினமும் நீ என்னை பார்த்தும் பாராமல் போகிறாய்
அதையும் பார்ப்பம் பாரமல் பார்க்காம எத்தனை மட்டும் பார்க்கப் போறாயென்று
"சொன்னா கேக்க மாட்டிங்களா"?? என்றதை கேக்கிறதற்காகவே தினமும் உன்னோடு சண்டை போடுவேன் ,
கோபத்தில் சிவக்கின்ற உன் கன்னங்களையும் கண்களையும் பார்க்க வேண்டும் ,
உன் புன்சிரிப்பிலே என் ஆயுளைக் கழிக்க வேண்டும் ....
உனக்காகவே இந்த உலகில் வாழ வேண்டும்.. உன் மனதின் சோகங்களை ஆற்ற வேண்டும்.
ஓர் இரவெனும் தூங்கது உன் தூக்கத்தை ரசிக்க வேண்டும் ...
உன் மன நிழலில் என் மன நிறைவோடு இளைப்பாற வேண்டும் ...
உன் மடி மீது தலை சாய்த்து தூங்க வேண்டும்,
தூங்காது உன்னோடு பேச வேண்டும் ....
மொத்தத்தில் நீ எனக்கு பாசத்தின் தாயக வேண்டும் ......
என்ற என் ஆசை இன்னும் நிறைவேறவில்லை....
என்றுமே நிறைவேறாத ஆசையாகப் போய்விடுமோ...
என்பது தான் எனது ஆதங்கம் .....
Wednesday, June 17, 2009
Subscribe to:
Posts (Atom)

.jpg)


.jpg)







